கோவாவில் விஜய் படத்திற்கான பாடல் கம்போஸிங்!

Bookmark and Share

கோவாவில் விஜய் படத்திற்கான பாடல் கம்போஸிங்!

இளம் இயக்குநர்களில் காஸ்ட்லியான இயக்குநராக மாறி இருக்கிறார் அட்லீ. புலி படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் ராஜா ராணி புகழ் அட்லீ.

பிரபல கார்ப்பரேட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க முன் வந்தது. கதை டிஸ்கஷனுக்காக வெளிநாட்டுப் பயணம்... ஸ்டார் ஹோட்டல் பில்.... என சுமார் 90 லட்சத்தை காலி பண்ணி இருக்கிறார் அட்லீ.

இதன் காரணமாகவும்... வேறு சில பிரச்சனை காரணமாகவும் அப்படத்தின் தயாரிப்பிலிருந்து அந்த கார்ப்பரேட் நிறுவனம் விலகிக்கொண்டது. அதன் பிறகு கலைப்புலி தாணு அந்தப் படத்தை அண்டர்டேக் பண்ணியதோடு, அதுவரை செலவு செய்யப்பட்ட தொகையையும் கொடுத்துவிட்டார்.

ஆக்ஷன், ரொமான்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படவிருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் சமந்தா நடிக்கிறார்.  

அதேபோல் தலைவா படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய்யின் 59வது படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மீண்டும் அவருடன் இணைகிறார்.

இது ஜி.வி.பிரகாஷ் குமாரருக்கு 50 ஆவது படம்.  இப்படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட்டாக வரவேண்டும் என்பதற்காக பாடல் கம்போஸிங்குக்காக ஜி.வி.பிரகாஷ் குமாரரும் அட்லீயும் தற்போது கோவா சென்றுள்ளனர்.

விஜய் படத்திற்கான் சூப்பர் ட்யூன்களுடன் இவர்கள் விரைவில் சென்னை திரும்பவிருக்கிறார்களாம். சைவம்; படத்தின் மூலம் தேசியவிருது பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் ஏற்கெனவே ஒரு பாடலை பதிவுசெய்துவிட்டாராம் ஜி.வி.பிரகாஷ்குமார்.

 


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions