விஜய்யால் விஜய்க்கே வந்த வினை

Bookmark and Share

விஜய்யால் விஜய்க்கே வந்த வினை

விஜய் நடித்த கத்தி படம் தற்போது விஜய்க்கே எமனாக வந்து நிற்கிறது. கத்தி படம் ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் காப்பி என்று விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு தொடுத்துள்ளார், குறும்பட இயக்குனர் அன்பு ராஜசேகர். இதையடுத்து கோர்ட், வரும் அக்டோபர் 15ஆம் தேதி விஜய், முருகதாஸ் உள்ளிட்ட ஏழு பேரையும் நேரில் ஆஜாராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.

நான் தஞ்சாவூர் மாவட்டம், இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவன். எனது குடும்பம் விவசாய குடும்பம். நான் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் 2012ஆம் வருடம் டிசம்பர் 24ஆம் தேதி ‘தாக பூமி’ என்ற குறும்படத்தை இயக்கி தயாரித்தேன்.

அதில் விவசாயிகள் படும் அவலத்தையும் அவர்கள் தற்கொலை செய்து கொள்வதையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விவசாய நிலத்தை விற்க கூடாது என்ற கருவையும் அடிப்படையாக கொண்டு எடுத்தேன்.

2013ஆம் ஆண்டு நார்வே நாட்டில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘தாகபூமி’ திரையிடபட்டது. தமிழகத்தில் மாநில அளவில் நடந்த குறும்பட போட்டியில் கலந்து கொண்டு, இயக்குநர் பாலுமகேந்திராவால் விருதும் வாங்கியது.

2013ஆம் வருடம் ஜூன் 14ஆம் தேதி யூடியூபில் பதிவேற்றமும் செய்தேன். அந்த வருடம் மே 30ஆம் தேதி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவருடைய டுவிட்டரில் உதவி இயக்குநராக தன்னிடம் சேர விரும்புபவர்கள் விவரங்களை மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டிருந்தார். நானும் ஜூன் 14ஆம் தேதி ‘தாக பூமி’ குறும்படத்தையும், என்னுடைய விவரங்களையும் அனுப்பினேன். ஆனால், அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில், எனது கதையை வைத்து நடிகர் விஜய் நடிக்க கத்தி படத்தை எடுத்து 2014 அக்டோபர் 22ஆம் தேதி ரிலீஸ் செய்தார் முருகதாஸ். இதனால், எனக்கு வாழ்க்கை இருட்டானது போல் இருந்தது. நான் மீண்டும் முருகதாஸ் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லை.

என் கதை, உழைப்பு, எனக்கு கிடைக்க வேண்டிய வெற்றி என எல்லாவற்றையும் திருடி விட்டார். என் கதையை வைத்து படம் எடுத்த அவர் தற்போது, இந்தி படம் ஒன்றை இயக்கி கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் நடித்த புலி படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.  ஆனால், என் வாழ்க்கை மட்டும் இப்போது கேள்வி குறியாக இருக்கிறது. அதனால் தான் அவர்கள் மீது திருட்டு வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்றார் 

தாகபூமி குறும்பட தரப்பினர் கூறுகையில் ”கத்தி படத்தின் பிரச்னையில் இதுவரை எங்களுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, தற்போது விஜய் நடித்துள்ள புலி படத்துக்கும் முருகதாஸ் தயாரித்து, விஜய் மில்டன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள ‘பத்து என்னுறதுகுள்ள’ படத்துக்கும் நீதிமன்றத்தின் மூலம் தடை வாங்கும் முயற்சியில் இருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions