விஜய் ஒரு நல்ல ரசிகன்: வைரமுத்துவின் புலி அனுபவம்

Bookmark and Share

விஜய் ஒரு நல்ல ரசிகன்: வைரமுத்துவின் புலி அனுபவம்

எம்.எஸ்.வி. முதல் டி.எஸ்.பி வரை பாடல்கள் எழுதியுள்ள வைரமுத்து யாருக்குமே சோடை போகும் பாடல்கள் தருபவரல்ல. தற்போது புலி படத்தில் இளைய தலைமுறை இசையமைப்பாளர் எனப்படும் தேவிஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து பணியாற்றியது பற்றிக் கூறும் போது...

"தேவிஸ்ரீ பிரசாத் உற்சாகமான இளைஞன். அவருக்குத் தாய் மொழி தெலுங்கு என்ற போதிலும் தமிழ்ப் பாடல்கள் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருக்கிறார். ஏகப்பட்ட பாடல்களைப் பாடிக் காட்டுவார். ஓர் இசையமைப்பாளருக்கு மொழி நேசமும், கவிஞருக்கு இசைப்புலமையும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்தப் பாடல் நன்றாக வரும்.

பரஸ்பரம் இந்த சக்தியைப் பரிமாற்றம் செய்கிறபோது பாடல் சிறப்பாக வரும். தேவிஸ்ரீ பிரசாத்திடம் மொழி பற்றிய புரிதலும் தொழில்நுட்ப அறிவும் இருக்கின்றன.

அவருடன் பேசிப் பழகியபோது சிறுவயது முதலே என் வரி கேட்டு வளர்ந்திருப்பதாகக் கூறினார். பேச்சுக்கு சொல்கிறாரோ, என்று நினைத்தேன் என் வரிகளை எல்லாம் சொல்லிக் காட்டியபோது பாடிக் காட்டியபோது மகிழ்ச்சியாக நம்பினேன்.

இசையும் மொழியும் காதலர்கள் போல ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தழுவிக் கொள்ளுதலே திரைப்பாடல். அங்கு ஆரத்துபும் அன்பு மட்டுமே இருக்க வேண்டும். ஆதிக்கம் செய்யும் மனோபாவம் இருக்கக் கூடாது.

புலியில் இசையும், மொழியும் இரண்டறக் கலந்து இருக்கும் என நம்பலாம். நான் எழுதும் படங்களைப் பொறுத்தவரை ஒரு பாடலாவது வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்க மாட்டேன்.

அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற வேண்டும் நினைப்பவன் நான். புலி யைப் பொறுத்தவரை நான் எழுதியுள்ள பாடல்களில் ஜனரஞ்சகமும் இருக்கும்; கருத்தும் இருக்கும்; இலக்கியமும் இருக்கும், அடித்தட்டு மக்களின் உணர்வும் இருக்கும், வாழ்க்கைச் சாரமும் இருக்கும். புலியிலுள்ள ஆறு பாடல்களும் விஜய்க்கு பெரிய வெற்றிப் பாடல்களாக அமையும்.

என் வரிகளில் விஜய் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார். விஜய் ஒரு சிறந்த ரசிகர். வெளியில் பார்த்தால் தெரியாது, அப்படித் தோன்றாது. அவர் இசையார்வம் மிக்கவர், வரிகளை ரசிப்பவர்.

என் பாடல்களை வாசித்தும் ரசித்தார், பாடியும் ரசித்தார். புலி படத்தின் பாடல்கள் பற்றி சொல்ல நிறைய இருக்கின்றன. அவை வெளியானதும் பேசுவதே நாகரிகம்" என்று முடித்துக் கொண்டார்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions