புலி படத்தில் சித்ரகுள்ளனாக நடித்துள்ள விஜய்!

Bookmark and Share

புலி படத்தில் சித்ரகுள்ளனாக நடித்துள்ள விஜய்!

சிம்புதேவன் இயக்கியுள்ள புலி படத்தில் விஜய் சில வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். ஆனால், அதை இப்போதே வெளியிட்டு விட்டால் சுவாரஸ்யம் குறைந்து போய் விடும் என்பதற்காக, படம் சம்பந்தப்பட்ட எந்தவொரு தகவலையும் வெளியில் கசிய விடக்கூடாது என்று அந்த யூனிட்டில் பணியாற்றிய நபர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனபோதும், சில விசயங்கள் படப்பிடிப்பு நடந்தபோதே வெளியானதை அவர்களால் தடுக்க முடியவில்லை. அந்த வகையில், அப்பு கமல் போன்று விஜய் ஒரு குள்ளமான உருவத்துடன் நடித்துக்கொண்டிருப்பதாகவும், அதை ஹாலிவுட்டில் இருந்து அதிநவீன ரக கேமராவை கொண்டு வந்து படம் பிடித்துக்கொண்டிருப்பதாகவும் அப்போது செய்திகள் வெளிவந்தன.

அந்த செய்தி தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு பாடல் காட்சியில் சித்ர குள்ளனாக விஜய் நடித்திருக்கிறாராம். அவர் தனது வழக்கமான உருவத்துடன் நடித்தபோதும் கேமராவில் அவரை மிகச்சிறிய உருவம் கொண்டவராக படமாக்கியிருக்கிறார்களாம்.

அதனால் இது தனது ரசிகர்களுக்கு புதிய விருந்தாக இருக்கும் என்று நம்புகிறாராம் விஜய்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions