ஸ்பாட்டுக்கு வந்தவேகத்திலேயே கேரவனுக்குள் நுழைந்து விடும் விஜய்!

Bookmark and Share

ஸ்பாட்டுக்கு வந்தவேகத்திலேயே கேரவனுக்குள் நுழைந்து விடும் விஜய்!

விஜய்யைப் பொறுத்தவரை மற்ற நடிகர்களை மாதிரி கிடையாது. அவசியப்பட்டால் மட்டுமே மற்றவர்களிடம் கலகலப்பாக பேசுவார்.

இல்லையேல் எந்நேரமும் அமைதியே உருவாக இருப்பார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளுமே அன்றைய தினம் தான் நடிக்க வேண்டிய காட்சிகளை முன்னமே ஒரு ஐடியா செய்து கொண்டுதான் ஸ்பாட்டுக்குள்ளேயே என்ட்ரி ஆகிறாராம் விஜய்.

அதனால், தினமும் தனது வீட்டில் இருந்து வரும்போது மேக்கப் காஸ்டியூம் அணிந்து தயார் நிலையில் ஸ்பாட்டுக்கு வருபவர், காரில் ஸ்பாட்டுக்கு வரும்போது இறங்கி நடந்தெல்லாம் செல்வதில்லையாம். நேராக கேரவன் நிற்கும் இடத்துக்கு சென்று அந்த வாசலில்தான் காரை விட்டு இறங்குவாராம்.

மேலும், அப்போது அக்கம் பக்கம் திரும்பிகூட பார்க்க மாட்டாராம். நேராக கேரவனுக்குள் சென்று விடுவாராம். அதையடுத்து டைரக்டர் அழைப்பு விடுக்கும் வரை உள்ளே இருக்கும் விஜய், அவர் அழைக்கிறபோது நடிக்க வேண்டிய அதே மூடுடன் கேமரா முன்பு வந்து நடிக்கிறாராம்.

முக்கியமாக அந்தந்த கேரக்டரில் தன்மை முழுமையாக வெளிப்பட வேண்டும் என்று நினைக்கும் விஜய், அதன்காரணமாகவே மற்றவர்களிடம் அதிகமாக பேசுவதைகூட தவிர்க்கிறாராம்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions