விஜய் பிறந்தநாளில் தான் புலி பர்ஸ்ட் லுக்! - ஆக., 15 படம் ரிலீஸ்!!

Bookmark and Share

விஜய் பிறந்தநாளில் தான் புலி பர்ஸ்ட் லுக்! - ஆக., 15 படம் ரிலீஸ்!!

கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் புலி. முதன்முறையாக சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிக்கும் இப்படத்தில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

பேண்டசி படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, நட்ராஜ் ஔிப்பதிவு செய்கிறார்.

எஸ்கேடி ஸ்டுடியோஸ் சார்பில் விஜய்யின் பிஆர்ஓ., செல்வகுமாரும், சிப்பு கே. தமீனும் தயாரிக்கின்றனர்.புலி படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னை ஈசிஆரில் பிரம்மாண்ட செட் போட்டு முதலில் படமாக்கப்பட்டது.

பின்னர் கேரளாவில் உள்ள மலைப்பகுதிகளில் மலை கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு படம் பிடித்தார்கள். இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன.

இப்போது ஆந்திராவிலுள்ள தலக்கோணம் பகுதியில் புலி படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற ஏப்ரல் 29ம் தேதியுடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது.

விஜய் படங்களிலேயே புலி படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. மேலும் சரித்திர காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருப்பதால் கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் விஜய் பிறந்தநாளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அதேசமயம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் பொருட்டு, புலி படத்தின் பர்ஸ்ட் லுக்கை அவரது பிறந்தநாளில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். படத்தை ஆகஸ்ட் 15ம் தேதிக்கு ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் இருக்கின்றனர்.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions