விஜய் படத்தை நான் இயக்கவில்லை: சீனு ராமசாமி

Bookmark and Share

விஜய் படத்தை நான் இயக்கவில்லை: சீனு ராமசாமி

‘கூடல் நகர்’, ‘தென்மேற்கு பருவகாற்று’ ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, விஷ்ணு, ஐஸ்வர்யா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

இப்படத்தையடுத்து சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் நாயகனாக அதர்வா நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் சீனு ராமசாமி விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் இணையதளங்களில் பரவியது. இதையறிந்த சீனு ராமசாமி, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறும்போது, விஜய்யை வைத்து நான் படம் இயக்குவதாக வந்த செய்திகள் உண்மையல்ல. அது வெறும் வதந்திகள். இதை யாரும் நம்பாதீர்கள். விஜய்க்கு கதை உருவானால் நிச்சயமாக அவரை சந்திப்பேன். தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம். சிறிய பட்ஜெட் படம்தான் இயக்கிவருகிறேன் என்றார். 


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions