விஜய் பிறந்தநாளை நல்வாழ்வு தினமாக கொண்டாட ரசிகர்கள் முடிவு

Bookmark and Share

விஜய் பிறந்தநாளை நல்வாழ்வு தினமாக கொண்டாட ரசிகர்கள் முடிவு

நடிகர் விஜய்-க்கு வருகிற ஜூன் 22-ந் தேதி பிறந்தநாள். விஜய் தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ஏழை-எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அவரது ரசிகர்களும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வருகிற ஜூன் 22-ந் தேதி விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நல்வாழ்வு தினம் என்ற பெயரில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். அன்றைய தினத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

மேலும், அன்றைய தினத்தில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவர இருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு வருகிற ஜூன் 22-ந் தேதி இரட்டிப்பு விருந்து காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

தன்னுடைய பிறந்தநாளை எப்போதும் ரசிகர்களும் கொண்டாடும் விஜய், கடந்த இரண்டு வருடங்களாக அதை தவிர்த்து வருகிறார்.

அதேபோல், இந்த வருடமும் தனது ரசிகர்களுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்த்துள்ள அவர், ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் ஓய்வெடுப்பதற்காக லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions