யூனிட் நபர்களிடம் கலகலப்பாக பேசத் தொடங்கிய விஜய்!

Bookmark and Share

யூனிட் நபர்களிடம் கலகலப்பாக பேசத் தொடங்கிய விஜய்!

தான் நடிக்கும் படங்களில் கலகலப்பாக நடிக்கும் விஜய், நிஜ வாழ்க்கையில் யாரிடமும் அதிகமான பேசுவதில்லை. விழாக்களுக்கு வந்தால்கூட கூச்சம் சுபாவம் கொண்டவரைப்போன்று ஓரமாகத்தான் ஓதுங்கி நின்று வருகிறார். நடிக்கும் படங்களில் தனது கேரக்டர் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு நழுவி விடுவார்.

அதேபோல், படப்பிடிப்பு தளங்களில் கேரவனை விட்டு அவர் அதிகமாக வெளியில் வருவதே கிடையாது. தனக்கான காட்சியில் நடித்து முடித்ததும் உடனே மீண்டும் கேரவனுக்குள் சென்று விடுவார்.

குறிப்பாக, கேமரா முன்பு நிற்கும்போது தன்னை சுற்றி யூனிட்வாசிகள் பலர் நின்றாலும் யாரையும் கவனிக்க மாட்டார். ஏதாவது சுவரை பார்த்தபடிதான் நிற்பார். இதனால் விஜய் நடிக்கும் படங்களில் பணியாற்றுபவர்கள்கூட அவரிடம் சகஜமாக பேசிப்பழகியதில்லை.

ஆனால், சமீபகாலமாக விஜய்யிடத்தில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டு வருவதாக அவரது படங்களில் ஒர்க் பண்ணி வருபவர்கள் சொல்கிறார்கள்.

அதாவது, கேமரா முன்பு நடித்து விட்டு உடனே கேரவனுக்குள் சென்று தலைமறைவாகிக் கொள்வதை குறைத்து விட்டு, யூனிட் நபர்களிடம் சகஜமாக பேசத் தொடங்கியிருக்கிறாராம்.

சில சமயங்களில் தனது படங்கள் பற்றியும், மற்ற படங்கள் பற்றியும்கூட மற்றவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கேட்கும் விஜய், கலகலப்பான உரையாடலிலும் ஈடுபடுகிறாராம்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions