விஜய் படம் ஆந்திராவில் ஜூலை 24ம் தேதி ரிலீஸ்

Bookmark and Share

விஜய் படம் ஆந்திராவில் ஜூலை 24ம் தேதி ரிலீஸ்

விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஜில்லா’. இப்படத்தை ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார்.

தமிழில் வெற்றியடைந்த இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். தெலுங்கில் பெரிய ஹீரோக்களுக்கு படத்தின் கதையை கூறியிருக்கிறார்கள். கதையை கேட்டு திருப்தியடையாத அவர்கள் படத்தில் நடிக்க மறுத்தார்கள்.

கடைசியாக ‘ஜில்லா’ ரீமேக்கில் ரவிதேஜாவும் வெங்கடேஷும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் ரீமேக் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதலால் ‘ஜில்லா’ படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர். இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் ஜூலை 24ம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் ரசிகர்களை கவர்வதற்காக காமெடி நடிகர் பிரம்மாணந்தத்தின் காமெடி காட்சிகளை மட்டும் படமாக்கி சேர்த்து வெளியிடுகின்றனர்.

தமிழில் ‘ஜில்லா’ வெற்றியடைந்து போல் தெலுங்கிலும் வெற்றி பெறுமா? என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions