விஜய்யின் அப்பாவை அவமதித்த இயக்குனரும் நடிகரும்

Bookmark and Share

விஜய்யின் அப்பாவை அவமதித்த இயக்குனரும் நடிகரும்

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சபைகளில் கிடைக்கிற மரியாதைகளும், பொன்னாடைகளும் அவரது கடந்த கால சில சில வெற்றிப்பட சாதனைக்காக மட்டுமே வழங்கப்படுபவை அல்ல. அதில் நிறைய விஜய்யின் மாஸ்சும் கலந்திருக்கிறது.

கிருமி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரஜினி ஜெயராம், ரஜினியை விட்டு விலகிய பின்பு விஜய்யின் தனி உதவியாளராக இருந்தவர். கிருமி படத்தின் பிரஸ்மீட்டுக்கு அவரது கட்டாய அழைப்பில் எஸ்.ஏ.சி.யும் வந்திருந்தாராம்.

இந்த படத்தை பார்க்க என்னை ஜெயராமன் கூப்பிட்டார். நானும் அரைமனதோடு, பாதி படத்தோடு எழுந்து வந்துவிடலாம் என்றுதான் போனேன். ஆனால் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே முழுசாக பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது. அப்படியொரு சிறப்பான படம் அது. நான் வீட்டுக்கு வந்த இரண்டு நாள் கழித்து கிருமி இயக்குனர் அனுசரனை அழைத்து, எனக்கொரு படம் இயக்க தர்றியான்னு கேட்டேன்.

நான் காக்கா முட்டை மணிகண்டனிடம் பேசிட்டு சொல்றேன் சார்னு சொல்லிட்டு போனார். அதற்கப்புறம் வரவேயில்லை. படத்தின் ஹீரோவை கூட என் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறியாப்பான்னு கேட்டேன். அவரும் வரவில்லை.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளரிடம் கூட, நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம். வருகிறாயான்னு கேட்டேன். அவரும் பதில் சொல்லவில்லை என்றார்.

இதன் மூலம் எஸ்.ஏ.சி, வெற்றி பெற்ற பிறகு அவர்கள் பின்னாடி ஓடுகிற ஆள் நானில்லை. திறமையிருந்தால் அவர்களை மதிப்பேன் என்று மறைமுகமாக சொல்லியுள்ளார். சிலர் இப்படி எஸ்.ஏ.சி அழைத்தும் அவர்கள் எந்த பதில் சொல்லாதது அவரை ஆவமதித்தது போல் உள்ளதாகவே கருதிகின்றனர்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions