ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ஓகே செய்த விஜய்!

Bookmark and Share

ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ஓகே செய்த விஜய்!

நேற்று தமிழ் சினிமாவில் மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்ட விஷயம் விஜய் படத்தின் அடுத்த இயக்குனர் பரதன் என்பதுதான். பல மாதங்களாக பலரும் எஸ்.ஜே. சூர்யா, ஜெயம் ராஜா, கார்த்திக் சுப்புராஜ் என பலவாறு பேசிக் கொண்டிருக்க எவரும் எதிர்பாராத வகையில் ‘அழகிய தமிழ் மகன்’ இயக்குனர் பரதனுக்கு வாய்ப்பளித்துள்ளார் விஜய்.

இதுமட்டுமில்லாமல் தனது அடுத்த படமான ‘விஜய் 61’ படத்தையும் உடனே ஓகே செய்துவிட்டதாக தகவல் வந்துள்ளன. ‘ஸ்பீடு டைரக்டர்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஹரி அவர்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இவர்கள் இருவரும் ஒரு படத்திலாவது இணைய மாட்டார்களா? என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி கூடுதல் சந்தோஷத்தை தந்திருக்கும்.

இது ஹரி பாணியில் உள்ள கிராமத்து கதையாக இருந்தாலும் விஜய்க்கு ஏற்ற பின்னணியில் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை 2017ஆம் ஆண்டு தீபாவளிக்கு கொண்டு வர தற்போதே முடிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions