தோல்வியடைந்த இயக்குனருக்கு வாய்ப்பளித்த விஜய்!

Bookmark and Share

தோல்வியடைந்த இயக்குனருக்கு வாய்ப்பளித்த விஜய்!

விஜய் தற்போது அட்லி இயக்கும் தனது 59-வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.  இப்படத்தை தொடர்ந்து விஜய், தனது 60-வது படத்தை மோகன்ராஜா, எஸ்.ஜே.சூர்யா அல்லது கார்த்திக் சுப்பாராஜ் இவர்களில் யாராவது ஒருவரின்  இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பரதன் விஜய் நடித்த ‘கில்லி’, அஜித்தின் ‘வீரம்’ ஆகிய படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ளார். 

தற்போது, இவர் சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப்போனதும் இதில் நடிக்க உடனே விஜய் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை வீரம் படத்தை தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

எடிட்டர் பிரவின் கே.எல் இப்படத்தை எடிட்டிங் செய்யவிருக்கிறார். இவர் ரஜினியின் ‘கபாலி’ படத்திற்கும் எடிட்டிங் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மதி ஒளிப்பதி செய்கிறார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இப்படத்தை தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions