நடிகர் விஜய்-க்கு இன்று பிறந்தநாள்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

Bookmark and Share

நடிகர் விஜய்-க்கு இன்று பிறந்தநாள்: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

குழந்தை நட்சத்திரமாய் ‘வெற்றி’ படத்தில் அறிமுகமாகி இன்றுவரை எந்த தலைக்கணமும் இல்லாமல் வெற்றி மகுடத்தை தலையில் சுமந்து வரும் இளையதளபதி விஜய்-க்கு இன்று பிறந்தநாள். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் அழகிய தமிழ் மகனாய் இன்றும், விஜய் வாழ்ந்து வருகிறார்.

ஒரு இயக்குனரின் மகன் என்பதால் திரையுலகில் எளிதாக நுழைந்துவிட்டார் என்றெல்லாம் இவரைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. அவருடைய உண்மையான உழைப்புதான் ஒவ்வொரு ரசிகனின் இதயத்திலும் அவரை ஆழமாக பதிய வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ‘கில்லி’ விஜய், இன்று 41-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் விழாவாக எடுத்து கொண்டாடி வருகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளான இன்று அவரது மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உள்ள சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் தற்போது நடித்துள்ள ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் விஜய் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions