இயக்குநர் அட்லீ படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகனாக வரும் விஜய்

Bookmark and Share

இயக்குநர் அட்லீ படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகனாக வரும் விஜய்

அஜித் பேசிய பஞ்ச் டயலாக்கை பேசுவது, அவர் பாணியில் காஸ்டியூம் அணிந்து  அவரது நடிப்பை மிமிக்ரி செய்வதன்முலம் தாங்கள் அஜித்தின் ரசிகர்கள் என்பதை சிம்பு,ஆர்யா போன்ற இளம் நடிகர்கள் காண்பித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தான் எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதை காண்பிக்க தக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்த விஜய்க்கு இப்போது அதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியள்ளார் அட்லீ. அட்லீயின் படத்தில் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகராக நடிக்கிறார் விஜய்.

எம்.ஜி.ஆரின் படங்கள் போன்று பெண்களுக்கு ஒரு சின்ன பிரச்சினை என்றாலும் பாய்ந்து சென்று சண்டை போடுவது,  கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களுக்காக குரல் கொடுப்பது மாதிரியான பாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய்.  

படத்தின் கதையை அட்லீ சொல்லி முடித்ததுமே, சில நாட்களாக தீவிரமாக யோசித்த விஜய், இந்த படத்தில் தம்முடைய ஸ்டைலில் இருந்து மாறி முற்றிலும் எம்ஜிஆர் பாணியில் மாறி நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாராம்.

எம்.ஜிஆரின் சினிமா வாழ்க்கை மட்டுமின்றி அவரது கொள்கைகள் என்னென்ன என்பதையெல்லாம் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து கேட்டறிந்து அதற்கேற்ப இப்படத்தில் நடித்துளாராம் விஜய்.

அவ்வகையில், இப் படம் முழு எம்.ஜி.ஆர். படத்தை பார்த்தது மாதிரி மட்டுமின்றி, இன்னொரு எம்.ஜி.ஆரையே கண்முன் நிறுத்தியது போன்றிருக்குமாம். அவ்வகையில் விஜய்யின் நடிப்பு வெளிப்பட்டு வருகிறதாம்.

அதனால் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படம், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions