விஜய்க்கு போட்டியான அவரின் தந்தை!

Bookmark and Share

விஜய்க்கு போட்டியான அவரின் தந்தை!

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் ‘நையப்புடை’ .இப்படத்தை ஒளிப்பதிவாளர் இயக்குநர் ஜீவனின் மகனான 19 வயதேயான விஜயகிரண் இயக்கியுள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் கதையின் நாயகனாக பிரதான வேடமேற்று நடிக்க , பா.விஜய். சாந்தினி, எம்.எஸ்.பாஸ்கர்,, விஜி சந்திரசேகர், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அறிமுகவிழா சமீபத்தில் நடைபெற்றது:-

விழாவில் இயக்குநர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது ” எனக்கும் தாணு அவர்களுக்கும் ‘சச்சின்’ படத்திலிருந்து நெருங்கிய பழக்கம். நாங்கள் ஒரு தயாரிப்பாளராக, இயக்குநராகப் பழகியதில்லை, அப்படி நண்பர்களாக இருக்கிறோம். அப்படி யதார்த்தமாகப் பழகுபவர் தாணு.

‘‘இப்படத்தில் என்னை வைத்து விஜயகிரண் ஆக்ஷன் செய்ய வைத்துள்ளார். நடனம் ஆடவைத்துள்ளார், காமெடி செய்ய வைத்துள்ளார், குழந்தைகளோடு வயது மறந்து நடிக்க வைத்துள்ளார். இப்படி திறமையாக வேலை வாங்கினார் விஜயகிரண்.

நடிகராக முதல் தகுதி ஆக்ஷன் செய்ய வேண்டும் குழந்தைகளும் விரும்ப வேண்டுமென்றால் நடனம் ஆடத் தெரியவேண்டும். ஆக்ஷன், நடனம் இந்த இரண்டும் இருந்தால் கதாநாயகன் ஆகி விடலாம். மற்ற இயக்குநர்கள் நடிகர் ஆக்கிவிடுவார்கள்.

இந்த இரண்டையும் வைத்து நான் விஜய்யை கதாநாயகன் ஆக்கினேன். பிறகு ‘பூவே உனக்காக’ போன்ற படங்கள் மூலம் இயக்குநர்கள் அவரை நடிகராக்கி விட்டார்கள்.

இப்படி வளர்ந்துதான் விஜய் வியாபார ரீதியான கதாநாயகன் ஆனார். அந்த வகையில் என்னை நடிகராக்கியுள்ள இந்த ‘நையப்புடை’ படம் எனக்கு ஒரு மறக்க முடியாத  அனுபவம்.

இதில் என்னை சண்டையிடும் காட்சி மற்றும் கயிற்றில் கட்டி தொங்க விட்டு சாகசம் செய்ய வைத்தனர். படமாக்கிய பிறகு அதை பார்க்க எனக்கே ஆச்சர்யர்மாக இருந்தது. இந்தபடம் வெளியானதும் ’’இளைய தளபதி விஜய்க்கு நான் தான் போட்டியாக இருப்பேன் என்று நினைக்கிறேன்’’ என்றார் சிரித்து கொண்டு கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions