எஸ்.தாணு தாயரிப்பில் ஹீரோவாக நடிக்கும் விஜய்யின் அப்பா!

Bookmark and Share

எஸ்.தாணு தாயரிப்பில் ஹீரோவாக நடிக்கும் விஜய்யின் அப்பா!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு திருப்புமுனை கேரக்டரில் ஒருசில காட்சிகள் நடிப்பார். அவருக்குள் நடிப்பு ஆசை எப்போதுமே உண்டு.

அதனால் டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை இயக்கி, அதில் தானே ஹீரோவாக நடித்தார். அது தன் கனவு படம் என்றும், கடைசி படம் என்றும் சொன்னார். ஆனால் அந்தப் படம் தோல்வி அடைந்தது. தற்போது ஒரு படத்தில் தனுஷின் அப்பாவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் நையப்புடை என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக பாடலாசிரியர் பா.விஜய் நடிக்கிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஜோடி கிடையாது. அவர் அக்கிரமங்களை கண்டு பொங்கி எழும் 70 வயது முதியவராக நடிக்கிறார். அதாவது இந்தியன் தாத்தா மாதிரி.

பா.விஜய் இளம் நிருபராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். இவர்கள் தவிர எம்.எஸ்.பாஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன், விஜி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
தாஜ்நூர் இசை அமைக்கிறார், ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகம் விஜய்விக்ரம் இயக்குகிறார்.

இவர் புனே திரைப்படக்கல்லூரியில் இயக்குனருக்கு படித்து விட்டு சில இந்திப் படங்களில் பணியாற்றிவிட்டு தமிழுக்கு வந்திருக்கிறார். "இது முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படம்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரையும் அவரது மகன் விஜய்யையும் வைத்து ஒரே நேரத்தில் படம் தயாரிக்கும் பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் சார் நல்ல நடிகராக ஒரு ரவுண்டு வருவார்" என்கிறார் கலைப்புலி எஸ்.தாணு.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions