ஒரு சமயத்தில் ஒரு படம் மட்டுமே நடிக்கும் விஜய்

Bookmark and Share

ஒரு சமயத்தில் ஒரு படம் மட்டுமே நடிக்கும் விஜய்

விஜய் நடிக்கும் 59வது படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இரண்டாவது படத்தையே விஜய்யை வைத்து இயக்கும் மிகப் பெரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார் இயக்குனர் அட்லீ.

இவர் முதலில் இயக்கிய  ராஜா ராணி படம் கூட மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து வரலாறு படைத்த மௌன ராகம் படத்தின் சாயல்தான் என்று ஏற்கெனவே பெரும்பாலானோர் குற்றம் சாட்டியுள்ளனர். அப்படியிருக்க அட்லீக்கு மிகப் பெரிய வாய்ப்பை விஜய் வழங்கியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கருடன்  நண்பன் படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த போதே, விஜய்யுடன் நெருக்கமாகப் பழகியதன் பலன் அட்லீக்கு கைமேல் கிடைத்திருக்கிறது.

1996 மற்றும் 1997ம் ஆண்டுகளில் மட்டுமே விஜய் நடித்த ஐந்து படங்கள் ஒரே ஆண்டில் வெளிவந்தன. அதன் பின் 4, 3, 2, 1 என வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே வெளிவரும் விதத்தில் தன்னை மாற்றிக் கொண்டார் விஜய். 2006ம் ஆண்டிலிருந்து இதைத்தான் விஜய் தொடர்ந்து செய்து வருகிறார்.

அது மட்டுமல்ல ஒரு படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த பிறகுதான் அடுத்த படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்கிறார். சில வாரங்களுக்கு முன்னர்தான்  புலி படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார் விஜய்.

அதன் பின் குடும்பத்தினருடன் லண்டன் சென்றுவிட்டு சில நாட்கள் முன்தான் சென்னை திரும்பினார். அவருடன்தான் 'விஜய் 59' பட பூஜையை நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு தீர்மானமாக இருந்ததால்தான் இன்று காலை பூஜையை நடத்தினார்கள். விஜய் 59 அனேகமாக கோடை விடுமுறையில் வெளிவரும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions