விஜய் நடிக்கும் படத்தில் உதிரிப்பூக்கள் மகேந்திரன்!

Bookmark and Share

விஜய் நடிக்கும் படத்தில் உதிரிப்பூக்கள் மகேந்திரன்!

தமிழ் சினிமாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று பெயர் எடுத்தவர் இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கும் மகேந்திரன், நிறைய படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியிருக்கிறார்.

ரஜினிக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் மகேந்திரனும் ஒருவர். ரஜினியின் திரைப்பாதையை வேறு விதமாக முள்ளும் மலரும் படத்தில் காண்பித்தவரும் அவர் தான். இதுநாள் திரைக்கு பின்னால் மட்டுமே செயல்பட்டு வந்த மகேந்திரன் முதன்முறையாக ஒரு நடிகராக திரையில் தோன்ற இருக்கிறார்.

அதுவும் நடிகர் விஜய் நடிக்கும் 59வது படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறார்.

அடலீ இயக்கத்தில், விஜய் நடிக்கும் 59வது படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது. படத்தின் பூஜைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அட்லீ, இந்த தகவலை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ஒரு பெரிய இயக்குநரான மகேந்திரன் சாரை எப்படி நடிக்க வைப்பது என்று யோசித்தேன், கொஞ்சம் பயந்தேன் என்று கூட சொல்லலாம். ஆனால் படத்தின் கதை அவரை நடிக்க வைத்துவிட்டது. நான் அவரிடம் கதை சொன்ன உடனேயே அவர் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் என்றார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions