மீண்டும் பேமிலி செண்டிமெண்ட்டுக்கு திரும்பும் விஜய்

Bookmark and Share

மீண்டும் பேமிலி செண்டிமெண்ட்டுக்கு திரும்பும் விஜய்

விஜய்யின் வெற்றியின் ரகசியமே பேமிலி செண்டிமெண்ட்டுடன் ஆக்ஷன் கலந்தது தான். சமீபகாலமாக பக்கா ஹீரோயிச படங்களில் நடித்தார். தலைவா, துப்பாக்கி, கத்தி, படங்கள் ஹீரோயிச ஆக்ஷன் படங்கள். தற்போது நடித்துள்ள படமான புலியும் பேண்டசி கலந்த ஆக்ஷன் படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் மீண்டும் பேமிலி செண்டிமெண்ட்டுக்கு திரும்புகிறார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரின் 59வது படம் முழுமையான பேமிலி படம். இதுபற்றி படத்தின் இயக்குனர் அட்லி கூறியதாவது: விஜய் அண்ணாவின் ரசிகன் நான். அவரை இயக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. நண்பன் படத்தின்போது எனக்கு நல்ல பிரண்டானார்.

அப்போதே உங்களை வைத்துதான் என் முதல் படத்தை பண்ணுவேன்னு சொன்னேன். நல்ல கதையோடு வாங்க பண்ணலாமுன்னு சொன்னார். ஆனால் நான் இயக்குனரானபோது அவர் நடிக்கிற மாதிரி கதை என்னிடம் இல்லை. அதனால் ராஜா ராணி இயக்கினேன். இப்போது அவருக்கேற்ற கதையோடு அவரை இயக்கப்போகிறேன்.

இந்த கதையை விஜய் அண்ணாவை மனதில் வைத்துதான் எழுதினேன். பேமிலி செண்டிமெண்ட்தான் படத்தோட ஃபேஸ். அதுல காமெடி, காதல், யதார்த்தம் மீறாத சண்டை இவற்றை வைக்கிறேன்.

தலைவர் ரஜினிக்கு பிடித்த இயக்குனர் மகேந்திரன் சார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மீனாவின் 3 வயது மகள் நடிக்கிறார். தயாரிப்பாளர் தாணு சார் என்ன கேட்டாலும் தரத் தயாராக இருக்கிறார். சமந்தா, எமி ஜாக்சன்னு இரண்டு ஹீரோயின். ராதிகா மேடம், பிரபு சார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாங்க என்றார் அட்லீ.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions