விஜய்யின் புலி சிடி ரிசர்வேசன் தொடங்கியது!

Bookmark and Share

விஜய்யின் புலி சிடி ரிசர்வேசன் தொடங்கியது!

விஜய் பட ஆடியோக்களுக்கு இப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. துப்பாக்கி, கத்தி படங்களில் விஜய் பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட்டானதால் அப்படங்களின் சிடிக்கள் அதிகமாக விற்பனையானது.

அந்த வரவேற்பினை கருத்தில் கொண்டு தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படத்தின் ஆடியோக்கள் பெரிய அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், செப்டம்பர் மாதம் புலி படத்தை வெளியிட திட்டமிட்டு தற்போது கிராபிக்ஸ் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட 2-ந்தேதி புலி படத்தின் ஆடியோ விழாவை, மகாபலிபுரம் அருகில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு போன்று ஆடியோ சிடிக்களுக்கான முன்பதிவையும் அமேசான் வர்த்தக இணையதளத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ளனர்.

ஒரு சிடிக்கு 120 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளனர். மேலும், ஆகஸ்ட் 2-ந்தேதி ஆடியோ ரிலீஸ் நடக்கும் அன்று காலையே சிடி புக் பண்ணியவர்களுக்கு டோர் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions