இலங்கை ரசிகர்களால் விஜய்க்கு கிடைத்த கௌரவம்

Bookmark and Share

இலங்கை ரசிகர்களால் விஜய்க்கு கிடைத்த கௌரவம்

இந்த ஆண்டில் இலங்கை மக்கள் அதிகம் தேடிய நடிகர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் நடிகர் விஜய். ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் கூகுளில் அதிகம் தேடியவர்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிடும். அதே போல இந்த வருடமும் கூகுள் நிறுவனம் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் உலகளவில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் நடிகை கிம் கர்தாஷியன் முதலிடம் பெற்று இருக்கிறார். உலகில் உள்ள அதிகமான நாடுகளில் கிம் கர்தாஷியனை அவரது ரசிகர்கள் போட்டி போட்டு தேடியுள்ளனர்.

கிம்முக்கு அடுத்த இடத்தில் கால்பந்து வீரர் மெஸ்ஸி இடம் பிடித்து இருக்கிறார். இந்தியாவில் இருந்து நடிகர் சல்மான்கான், நடிகை காத்ரீனா கைப் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் இடம்பிடித்து இருக்கின்றனர். இந்தியா, பூடான் மற்றும் ஃபிஜி போன்ற நாடுகளில் சல்மான்கானை ரசிகர்கள் அதிகம் தேடியிருக்கின்றனர்.

இதே போல வங்கதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடிகை கத்ரீனாவை அதிகம் தேடி இருக்கின்றனர். இந்த வரிசையில் நடிகர் விஜய்யும் இடம்பிடித்து இருக்கிறார். விஜய்யை இலங்கை மக்கள் அதிகம் தேடி இருப்பதாக கூகுள் நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

இதன் மூலம் இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் விஜய்யின் புகழ் அதிகரித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் தற்போது இதனைக் கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions