விஜய்யின் புலி, சூர்யாவின் 24 படங்களும் டைம் மிஷின் கதைதான்!

Bookmark and Share

விஜய்யின் புலி, சூர்யாவின் 24 படங்களும் டைம் மிஷின் கதைதான்!

விஷ்ணு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் இன்று நேற்று நாளை. இந்த படம் டைம் மிஷினை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. அந்த டைம் மிஷினை ஆன் செய்தால் கடந்த காலத்துக்கும் போகலாம், எதிர்காலத்திற்கும் போகலாம்.

இந்த மாதிரியான ஒரு கதையில் வெளியான அப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் விஜய் நடித்து வரும் புலியும், சூர்யாவின் 24 ஆகிய படங்களும் இதே டைம் மிஷினை மையமாக வைத்துதான் உருவாகி வருகிறதாம். இதில் விஜய்யின் புலி படம் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முந்தைய ராஜா காலத்து கதையில் உருவாகிறது.

ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்து 500 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது எதிர்காலத்துக்கு சென்று ஒரு வீரனை அழைத்து சென்று ராணி ஒருவருக்கு சவாலாக இருக்கும் படைத்தளபதியை முறியடிக்கும் கதையாம்.

ஆக, டைம் மிஷின் மூலம் நிகழ்காலத்தில் இருந்து கடந்த 500 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று ஒரு கதை பண்ணியிருக்கிறார் சிம்புதேவன். இதேபோல்தான் சூர்யாவின் 24 படமும் நிகழ்காலம், கடந்தகாலம், எதிர்காலம் என மூன்று காலங்களிலும் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறதாம்.

இவைதவிர கோலிவுட்டில் இன்னும் எத்தனை படங்கள் இதே டைம் மிஷின் கதைகளில் உருவாகிக்கொண்டிருக்கிறதோ? விரைவில் அந்த தகவல்களும் வெளிவரும்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions