'புலி' விஜய் எப்படி இருப்பார்: பார்க்க ஆசையா இருக்கிறதா?

Bookmark and Share

'புலி' விஜய் எப்படி இருப்பார்: பார்க்க ஆசையா இருக்கிறதா?

இளைய தளபதி விஜய் நடித்து வரும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

சிம்பு தேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் பேன்டஸி படம் புலி. துப்பாக்கி, கத்தி என்று தொடர்ந்து ஆயுதங்களின் பெயர் கொண்ட படங்களில் நடித்த விஜய் தற்போது விலங்கின் பெயர் கொண்ட படத்தில் நடிக்கிறார்.

ஆனால் இந்த பெயரும் நிலையில்லை என்று கூறப்படுகிறது. படத்தின் பெயர் மாற்றப்படலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். ஹாங்காங்கைச் சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் நாங்(Nang)கூறியபடி விஜய் பயங்கரமான ஸ்டண்ட் காட்சியில் நடித்துள்ளாராம்.

புலி படத்தின் படப்பிடிப்பு பற்றி பல செய்திகள் வருவதை பார்த்துவிட்டு ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது புலி படத்தில் விஜய் பார்க்க எப்படி இருப்பார் என்பது தான் அந்த எதிர்பார்ப்பு. இந்நிலையில் தான் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியை தெரிவிக்கிறோம்.

புலி படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் வெளியாகுமாம். புலி படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு இளமை துள்ளும் ஹீரோயின்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions