விஜய் படத்தில் காலேஜ் பெண்ணாக நடிக்கும் சமந்தா

Bookmark and Share

விஜய் படத்தில் காலேஜ் பெண்ணாக நடிக்கும் சமந்தா

‘கத்தி’ படத்திற்கு பிறகு சமந்தா, விஜய்யுடன் இணைந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இப்படத்தில் எமிஜாக்சன், ராதிகா சரத்குமார், பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் சமந்தா கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சமந்தா இப்படத்தில் காலேஜ் பெண்ணாக நடிக்கிறாராம். இவருடைய கதாபாத்திரம் ரொம்பவும் துறுதுறுவென இருக்கும் என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்கவிருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கிட்டத்தட்ட இப்படத்துக்கான அனைத்து பாடல்களையும் இவர் முடித்துக் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்பாடல்களை அட்லி சென்னையிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளாராம்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions