விஜய்யிடம் தைரியம் இருக்கிறது! - தேவி ஸ்ரீ பிரசாத்

Bookmark and Share

விஜய்யிடம் தைரியம் இருக்கிறது! - தேவி ஸ்ரீ பிரசாத்

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் புலி. அவருடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமைய்யா, இமான் அண்ணாச்சி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ விழா ஆகஸ்ட் 2-ந்தேதி நடக்கிறது.முன்னதாக, நேற்று சென்னையில் புலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

அப்போது இயக்குனர் சிம்புதேவன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய் கலந்து கொள்ளவில்லை.

அப்போது தேவி ஸ்ரீ பிரசாத் புலி படத்தைப்பற்றி கூறும்போது, இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை பட்டியலிட்டு முதலில் என்னிடம் சிம்புதேவன் சொன்னபோது நான் நம்பவேயில்லை.

காரணம். இத்தனை பெரிய நடிகர்களை ஒரே படத்தில் இணைப்பது என்பது சாதாரண விசயமல்ல. ஆனால் அவர் அத்தனை பேரிடமும் கால்சீட் வாங்கியாச்சு என்று அடித்து சொன்னார். அதன்பிறகுதான் நம்பினேன்.

மேலும் இதற்கு முன்பு விஜய் சார் படங்களுக்கு இசையமைத்ததை விடவும் இந்த படத்தில் பிரமாதமான இசையை கொடுத்திருக்கிறேன்.

அதோடு, இந்த புலி போன்ற சரித்திர படங்களில் விஜய் சார் மாதிரியான மாஸ் ஹீரோக்கள் நடிப்பது பெரிய விசயம். இதில் நடிப்பதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும். அது விஜய் சாரிடம் உள்ளது. எல்லோராலும் இது முடியாத விசயம் என்றார்.


Post your comment





Related News
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions