விஜய் 59 படத்துக்கு விமரிசையாக பூஜை!

Bookmark and Share

விஜய் 59 படத்துக்கு விமரிசையாக பூஜை!

பொதுவாக விஜய் நடிக்கும் படங்களுக்கு ஆர்ப்பாட்டமாக துவக்கவிழா நடைபெறும் வழக்கம் இல்லை. ஆரம்பகாலத்தில் விஜய் நடிக்கும் படங்களுக்கு விமரிசையாக விழா எடுத்து படத்தை துவங்கினார்கள். அவர் நட்சத்திரமாக உருவெடுத்த பிறகு இந்த சடங்குகளை வெறுக்க ஆரம்பித்துவிட்டார் விஜய். கலைப்புலி தாணுவோ எதையும் பிரம்மாண்டமாக செய்தே பழக்கப்பட்டவர்.

புலி படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 59-ஆவது படத்தை தாணு தயாரிக்கிறார். இந்தப்படத்தின் துவக்க விழா எப்படி நடைபெறும் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.

அதற்கான விடையாக.. நாளை(ஜூன் 26ம் தேதி) காலை சென்னை ஈ.சி.ஆர்.ரோட்டில் உள்ள கேரளா ஹவுஸில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது.

கலைப்புலி  எஸ்​. தாணு பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தை அட்லீ இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள்.

அட்லீ இயக்கிய  ராஜா ராணி படத்திற்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படம் அவரது 50-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி படத்தை தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறவிருக்கும் பூஜையை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions