விஜய்யின் 59வது படம் துவங்கியது!

Bookmark and Share

விஜய்யின் 59வது படம் துவங்கியது!

புலி படத்தை தொடர்ந்து விஜய்யின் 59வது படம், சென்னை, ஈசிஆர்., ரோட்டில் சற்றுமுன் துவங்கியது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பேண்டஸி திரைப்படம் புலி. சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் துவங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம், புலி, திரையில் பாய இருக்கிறது.

இந்நிலையில் இந்தப்படத்திற்கு பிறகு விஜய், ராஜா ராணி  இயக்குநர் அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். விஜய் ஜோடியாக சமந்தாவும், எமி ஜாக்சனும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

ஜி.வி.யின் 50வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய்யின் இந்தப்படத்தை தாணு பிரமாண்ட முறையில் தயாரிக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு.

இப்படத்தின் பட பூஜை இன்று(ஜூன் 26ம் தேதி), சென்னை, ஈசிஆர்., ரோட்டில் உள்ள கேரளா ஹவுஸில் சிறப்பாக தொடங்கியது. தொடர்ந்து இன்று சில காட்சிகளும் படமாக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற இருக்கிறது.

இப்படத்தின் துவக்க விழாவில் விஜய், அட்லி, ஜி.வி.பிரகாஷ், கலைப்புலி எஸ்.தாணு, விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், அட்டகத்தி ரஞ்சித், பிரபு, ராதிகா, அபிராமி ராமநாதன், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விஜய்யின் 59வது பட பூஜையில் ரஜினி பங்கேற்பார் என சில நாட்களாக ஒரு தகவல் வௌியானது, ஆனால் அந்தமாதிரி எதுவும் நடக்கவில்லை. மேலும் இப்படத்தின் பூஜையில் இப்பட ஹீரோயின்களான சமந்தா, எமி ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions