அமெரிக்காவில் படமாகும் விஜய் 60!

Bookmark and Share

அமெரிக்காவில் படமாகும் விஜய் 60!

அஜித்தின் அடுத்தப்படம் என்ன? யாருடைய இயக்கத்தில் நடிக்கிறார் என்பதை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது. விஜய் கதை இதற்கு நேர்மாறாக இருக்கும். யாராவது ஒரு இயக்குநர் அவரிடம் கதை சொல்லி ஓகே ஆன சில மணி நேரத்திலேயே அந்த செய்தி வெளியே வந்துவிடும்.

அப்படித்தான் விஜய்யின் 60 ஆவது படம் பற்றிய தகவல் தற்போது கசிய ஆரம்பிதுள்ளது. தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் தனது 58ஆவது படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்.  

இதனையடுத்து தாணு தயாரிப்பில், அட்லீ இயக்கும் படமொன்றில் விஜய் நடிக்க இருப்பது அவரது 59 ஆவது படம்.  இப்படம் குறித்து ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த இரண்டு படங்களும் முடிவதற்குள் 2015 ஆம் ஆண்டு தொடங்கிவிடும். இந்நிலையில், விஜய் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய செய்திகள் இப்போதே வெளிவரத் தொடங்கிவிட்டன.  

விஜய்யின் 60 ஆவது படத்தை இயக்குபவர்களின் பட்டியலில் எம். சசிகுமார், ஷங்கர், பிரபுதேவா, கௌதம் மேனன், பிரபுதேவா ஆகியோரின் பெயர்கள் உள்ளன. இவற்றில் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் கதை முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெறுகிறதாம்.  

எனவே பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் விஜய். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகவிருக்கிறதாம். அட்லீ இயக்க உள்ள விஜய் 59 படத்திற்குப் பிறகு பிரபுதேவா இயக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions