ஐதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்கிய விஜய் 60 படக்குழு!

Bookmark and Share

ஐதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்கிய விஜய் 60 படக்குழு!

‘தெறி’ படத்திற்குப் பிறகு விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘விஜய் 60’ என்று அழைத்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு நெல்லை பகுதியில் நடந்து வந்தது. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். அடுத்த கட்டமாக இப்போது ஜதாராபத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் விஜய் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இங்கு இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

இதில் ஒன்று திருமண பாடல் காட்சி. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஆடம்பர திருமண விழாவுக்காக பிரமாண்டமான அலங்காரம் செய்யப்பட்ட அரங்கத்தில் இதற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. இன்னொன்று விஜய்யின் அறிமுகப் பாடல். இதில் நடனக் குழுவினருடன் ஆடி அசத்துகிறார். இந்த இரண்டு பாடல்களுடன் வேறு சில காட்சிகளும் படமாக்கப்படுகின்றன.

ஒரு மாத காலம் இங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. ‘மைனா’ சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions