விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு

Bookmark and Share

விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு

ரஜினி, கமலை போலவே விஜய்க்கும் அரசியல் ஆசை எழுந்தது. மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார்.

இதனால் ‘தலைவா’ படத்துக்கு சிக்கல் எழுந்தது. அதன் பின்னர் அரசியல் ஆசையை ஒதுக்கி வைத்துவிட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார்.
சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘மெர்சல் படத்தில் மத்திய அரசை குறைகூறும் வசனங்கள் இருந்ததால் தீவிர எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ஒரு அரசியல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விவசாயிகளுக்காகவும் மீனவர்களுக்காகவும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் பணக்காரராக வருகிறார். விவசாயிகளுக்கு துரோகம் செய்து தங்கள் சுயநலனுக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளாக ராதா ரவியும் பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள்.

இந்த படத்துக்காக ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. தாய் கழகத்தில் இருந்து பிரிந்த பழ.கருப்பையா மீண்டும் தாய்க்கழகமான ராதாரவியுடனே சேர்வது போலவும் கட்சியின் இணைப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவது போலவும் காட்சி படமாக்கப்பட்டது.

இந்த அரசியல் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிப்பது போலவும் காட்சி எடுக்கப்பட்டது. கட்சியின் பெயர் அ.இ.ம.மு.க. என்று இருந்தது.

எனவே இந்த படம் தமிழகத்தில் சமீபகால அரசியல் சம்பவங்களை காட்சியாக்கி எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிய வருகிறது.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தாய்க் கழகத்துடன் இணைந்து எடப்பாடி பழனிசாமியுடன் பயணித்து வருகிறார். இந்த காட்சி படத்தில் இடம் பெறுகிறது.

இந்த காட்சிகளில் நடப்பு அரசியலை கடுமையாக விமர்சித்து வசனங்கள் பேசியுள்ளார் விஜய் என்கிறது படக்குழு. படம் வெளியாகும்போது பிரச்சினை பெரிதாக வெடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 


Post your comment

Related News
சர்கார் டீஸர் கொண்டாட தயாராகும் தளபதி ரசிகர்கள்..!
ரசிகர் மன்றங்கள் வாயிலாக கேரளா வெள்ளத்திற்கு உதவி செய்யும் தளபதி விஜய்..!
பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!
தளபதி விஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது - பிரபல நடிகை ஓபன்டாக்..!
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions