விஜய், அஜீத்தைத் தொடர்ந்து சூர்யா படத்தையும் கைப்பற்றினார் அனிருத்!

Bookmark and Share

விஜய், அஜீத்தைத் தொடர்ந்து சூர்யா படத்தையும் கைப்பற்றினார் அனிருத்!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராகி விட்டவர் அனிருத். குறிப்பாக, தனுஷ் நடித்த 3, வேலையில்லா பட்டதாரி, மாரி மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான்கராத்தே, காக்கி சட்டை ஆகிய படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர், அதற்கடுத்து விஜய்யின் கத்தி படத்துக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளரானார்.

மேலும், அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தையும் கைப்பற்றிவிட தீவிரமாக முயற்சி எடுத்தார். ஆனால் அந்தவாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் விடா முயற்சி காரணமாக தற்போது சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அனிருத் இந்த நிலையில், சூர்யா நடித்த சிங்கம், சிங்கம்-2 படங்களுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்தார். ஆனால் சிங்கம்-3 படத்தில் அவர் இல்லை. மாறாக, அனிருத் அந்த படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இப்படி மெகா படங்களை கைப்பற்றியிருக்கும் அனிருத், சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது, ஏ.ஆர்.ரகுமான் பாணியில் யாரும் தொந்தரவு செய்யாத இரவு நேரங்களில் கம்போஸிங்கில் தீவிரமடைந்திருக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions