விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளிய பிரஷாந்த்

Bookmark and Share

விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளிய பிரஷாந்த்

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரஷாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் சாஹசம். இப்படத்தை பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் ஷங்கரிடம் எப்போதுமே ஒரு படம் தொடங்கும் முன்பு அந்தப் படத்துக்கு யாரை ஹீரோவாகப் போடுவது என்று ஒரு பட்டியல் தயாராகும். பலமுறை அதில் முதலில் பிரஷாந்த்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

ஜீன்ஸ் படம் எடுக்க தீர்மானித்த போதும் இதே மாதிரி ஒரு பட்டியல் தயாரானது. யாருக்கு ஜோடியாகப் போட்டு ஐஸ்வர்யாராயை தமிழில் அறிமுகம் செய்வது என்று பட்டியல் போட்டு பரிசீலனை செய்தோம்.

அந்தப்பட்டியலில் விஜய், அஜித் பெயர் இருந்தது. அதில் பிரஷாந்த் பெயரும் இருந்தது. கடைசியில் இந்த மூவரில் வெற்றி பெற்றவர், பிரஷாந்த் தான். நடிகர்களுக்கு தேவையான எல்லாமும் பிரஷாந்திடம் இருக்கிறது. அழகு, அறிவு, டான்ஸ் ஆடும் திறமை, ஸ்டண்ட் செய்யும் திறமை இருக்கிறது.

எதுவானாலும் பிச்சி பெடலெடுப்பார். இப்படி அத்தனையும் ஒரு சேரப் பெற்றவர் அவர். கட்டுப்பாடுள்ளவர், படப்பிடிப்பில் உதவி இயக்குநர் போல வேலை செய்வார்.

அப்பா பேச்சை தட்டாத பிள்ளை. அவர் தன் படங்களுக்கிடையே ஏன் இடைவெளி விடுகிறார் என்று எனக்கு அவர் மீது கோபமே வரும். ஆனால் அவர் பதுங்கி இருந்தது பாய்வதற்குத்தான் என்று இப்போது புரிகிறது. அது அவர் நடிக்கவுள்ள படவரிசையைப் பார்க்கும் போது புரிகிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions