இணையதளச் சண்டைகளைப் பற்றி விஜய்யும் அஜித்தும் மவுனம் தெரிவிப்பது ஏன்?

Bookmark and Share

இணையதளச் சண்டைகளைப் பற்றி விஜய்யும் அஜித்தும் மவுனம் தெரிவிப்பது ஏன்?

சினிமா ரசிகர்களின் உச்சக்கட்ட சண்டை இந்த இரண்டு வாரங்களில் நடந்துள்ளது.

சென்றவாரம் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், கமல்ஹாசனின் தூங்காவனம் டிரெய்லரும் வெளியானது. வித்தியாசமான கெட்டப்பில் ரஜினி நடிப்பதால் அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம்.

அதேநாள் கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தின் டிரெய்லருக்கான எதிர்ப்பார்ப்பில் கமல் ரசிகர்கள் ஒருபக்கம் ட்விட்டரில் மாறி மாறி ட்ரெண்டுகளை உருவாக்கினர்.

இரண்டும் ஒரே நாளில் ஹிட் அடித்து ட்விட்டரிலும் ட்ரெண்டானது. ஆனாலும் இரு தரப்பு ரசிகர்களிடையே எந்தவித சண்டையோ, கலாய்ப்புகளோ, மீம்ஸ்களோ கிடையாது. 

ஆனால் நேற்று சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கான பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், விஜய் நடிக்கும் புலி படத்திற்கான டிரெய்லரும்  வெளியானது. வெளியாகும் போதே இரு நடிகர்களின் ரசிகர்களும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து மாறி மாறி இணைய தளத்திலேயே சண்டையும் போட்டனர்.  

புலி படத்தின் டிரெய்லரில் மீம்ஸ்கள், அஜித் பட டைட்டிலை கலாய்த்து மீம்ஸ்கள் என்று இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு கலாய்த்தனர் . சென்றவாரம் வெளியான ரஜினி - கமல் படங்களுக்கு இவ்வாறான எந்தப் பிரச்னையும் வரவில்லை.

நமக்கு பிடித்தமான நடிகரின் டிரெய்லரோ, போஸ்டரோ வெளியானால் இவ்வாறான சண்டைகள் நடப்பதை சம்பந்தப்பட்ட  நடிகர்கள் விரும்பமாட்டார்கள் என்பதை முதலில் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions