போன முறை இளைய தளபதிக்காக..இந்த முறை தல, உலக நாயகனுக்காகவா? தயாரிப்பாளர்கள் சங்கம் திடீர் முடிவு

Bookmark and Share

போன முறை இளைய தளபதிக்காக..இந்த முறை தல, உலக நாயகனுக்காகவா? தயாரிப்பாளர்கள் சங்கம் திடீர் முடிவு

சில வாரங்களுக்கு முன்பு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் புதிய படங்களைத் திரையிடமாட்டோம் என்று அறிவித்தது.

அப்போதே அருண்பாண்டியன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் அம்முடிவைக் கடுமையாக எதிர்த்ததோடு அதைக்கடைபிடிக்க முடியாதென வெளிப்படையாக அறிவித்தனர்.

அதனால் தயாரிப்பாளர்கள் சங்கம், தனது முடிவை மாற்றிக்கொண்டு, படங்கள் திரையிடப்படும் என்றும் வருகிற அக்டோபர் 23ம் தேதியிலிருந்து புதியபடங்கள் ரிலீஸ் கிடையாது என்றும் முடிவெடுத்தனர்.

அப்போதே இதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டது.அதை மெய்ப்பிக்கும் விதமாக, நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஒரு அறிக்கை விடுத்துள்ளனர்.
அறிக்கையில் கூறியதாவது:

தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 23.10.2015 முதல் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவை திரும்ப பெறக்கோரி கேட்டுக்கொண்டதற்கிணங்கவும், நமது தயாரிப்பாளர்கள் பலர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலும் 23.10.2015 முதல் எந்தமொழித் திரைப்படங்களையும் வெளியிடுவதில்லை என்ற முடிவை ஒத்திவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திரையுலகின் அனைத்து பிரிவினரையும் கலந்து பேசி மறு தேதி அறிவிக்கப்படும். நமது சங்க உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு தங்களது மேலான ஒத்துழைப்பை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

ஒரு முறை விஜய்யின் புலி படத்திற்காக இந்த முடிவு ஒத்திவைத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து தீபாவளியன்று கமல், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாகவுள்ளன. எனவே தன் முடிவில் இருந்து தயாரிப்பாளர் சங்கம் இரண்டாவது முறையாகப் பின்வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions