விஜய், அஜித் படங்களைப் பிடிக்கப் போட்டி!

Bookmark and Share

விஜய், அஜித் படங்களைப் பிடிக்கப் போட்டி!

அஜித்தின் 'என்னை அறிந்தால்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. மார்ச் மாதத்தில் அஜித்தின் அடுத்த படம் ஆரம்பமாக உள்ளது. 'வீரம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் சிவா - அஜித் மீண்டும் இணையும் இந்தப் படத்தை 'ஆரம்பம், என்னை அறிந்தால்' ஆகிய படங்களைத் தயாரித்த ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

படத்திற்கான கதை விவாதம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால், அதற்குள் படத்தில் அஜித் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதும் பரபரப்பாக ஆரம்பமாகிவிட்டது.

சில முன்னணி நடிகைகள் ஏற்கெனவே களத்தில் குதித்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, அனுஷ்கா ஆகியோர் அந்தப் பட்டியலில் கண்டிப்பாக இல்லை.

அஜித்தின் அடுத்தடுத்த படங்களில் இவர்கள்தான் ஜோடியாக நடித்துள்ளார்கள். அப்படியென்றால் அந்த வாய்பைப் பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகளில், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சமந்தா, காஜல்  அகர்வால் ஆகியோர்தான் முன்னணியில் இருக்கிறார்களாம். விஜய் தற்போது நடித்து வரும் 'புலி' படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றனர்.

அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகள் ஓரளவிற்கு ஆரம்பமாகிவிட்டன. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதும் போட்டி நிறைந்த ஒன்றாகிவிட்டது.

ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சமந்தா, காஜல் அகர்வால் இந்தப் பட்டியலில் இருக்க மாட்டார்கள். விஜய்யின் அடுத்தடுத்த படங்களில் இவர்கள்தான் ஜோடியாக நடித்துள்ளார்கள்.

தமன்னா நடிப்பாரா என்றால் 'சுறா' வந்து பயமுறுத்திவிடும். நயன்தாராவும் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.ஆக, விஜய், அஜித் ஜோடியாக அவர்களின் அடுத்த படங்களில் ஜோடியாக நடிக்கப் போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பதைக் கண்டுபிடிக்க 'உங்களில் யார் அடுத்த ஜோடி' என ஒரு போட்டியே வைக்கலாம் போலிருக்கிறதே...!


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions