தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்

Bookmark and Share

தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் ரஜினி, கமல், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் முதல் சூரி வரை எல்லா பெரிய, சின்ன நடிகர்களுமே தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் வலுவாக பதிவு செய்தனர்.

ஆனால் விஜய்யோ, அஜித்தோ இதுவரை வாயே திறக்கவில்லை.

தமிழ்நாட்டில் ரஜினிக்கு பிறகு விஜய், அஜித் இருவருக்கு தான் ரசிகர்கள் அதிகம். இருவரது ரசிகர்களும் நினைத்தால் ஒரு செய்தியை உலக அளவிற்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் தமிழ்நாட்டில் நடந்த இத்தனை பெரிய சம்பவத்துக்கு இருவருமே கண்டனம் தெரிவிக்காதது அவர்களின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரசிகர் ஒருவர் இதுபற்றி கூறும்போது ‘விஜய்யாவது இதற்கு முன்பு சில பிரச்சினைகளில் கண்டனம் தெரிவித்தார். அனிதா பலியானபோது வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறினார். ஆனால் இந்த சம்பவத்தில் அவரும் கருத்து கூறவில்லை.

இவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள் அதனை உலக அளவில் கொண்டு செல்லலாம் என்று காத்திருந்தோம். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாத மாதிரி இருந்துகொண்டார்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது’ என்றார். விஜய், அஜித் மட்டும் அல்லாது முன்னணி கதாநாயகிகளும் தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

 


Post your comment





Related News
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
விஜயின் மெகா ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித் - செம மாஸ் தகவல்.!
ப்ரியா பிரகாஷ் தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகர் தெரியுமா? அவரே தெரித்துள்ளார்
முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?
அஜித்தை போல யாரும் இல்லை, ஆனால் விஜய்? பிரபல நடிகர் ஓபன் டாக் - ரசிகர்கள் ரியாக்ஷன்.!
அஜித்தா? விஜயா? நறுக்கென்று பதில் சொன்ன சன் சிங்கர் பிரபலம்.!
இந்த படங்களில் விஜய் அஜித் நடித்திருந்தால் பட்டய கிளப்பி இருக்கும் - பிரபல நடிகர் அதிரடி பேச்சு.!
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions