
நடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.
ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனுஷின் அடுத்த படத்திலும் அவர்தான் நாயகி என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகை அமலாபால் மீண்டும் நடிக்க வந்தது இயக்குனர் விஜய்க்கு பிடிக்காமல் போனதாகவும் எனவே அவர் விவாகரத்து வரை செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் உண்மையில் அமலாபால் நடிப்பது விஜய்க்கு ஒரு பிரச்சனையே இல்லையாம்.
அவருடைய பெற்றோர்கள்தான் அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்களாம். ஓரளவு பொறுத்து பொறுத்துப் போன அமலாபால் இனி தன்னால் ப்ரெஷரை தாங்கமுடியாது என விவாகரத்து முடிவு எடுத்துவிட்டாராம்.
Post your comment