மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த அமலாபால்

Bookmark and Share

மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த அமலாபால்

விஜய்-அமலாபால் இணைந்து ‘தலைவா’ என்ற படத்தில் நடித்திருந்தனர். விஜய் இயக்கியிருந்த இப்படம் மும்பையை மையமாக வைத்து வெளிவந்தது. இப்படத்திற்கு பிறகு அமலாபாலும், இயக்குனர் விஜய்யும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், அமலாபால் படங்களில் நடிக்காமல் சற்று ஒதுங்கியிருக்கிறார். 

இந்நிலையில், ‘தலைவா’ படத்திற்கு பிறகு விஜய்யும், அமலாபாலும் தற்போது மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இது, படம் அல்ல, ஒரு விளம்பரத்துக்காக இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 

விஜய், பிரபல நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸின் விளம்பர தூதர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இக்கடையின் விளம்பரங்களில் இதுவரை விஜய் மட்டுமே நடித்து வந்தார். 

தற்போது எடுக்கப்பட்ட புதிய விளம்பரத்தில் விஜய்யும், அமலாபாலும் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் பரவி வருகின்றன. கூடிய விரைவில் இந்த விளம்பரங்கள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் வெளியாகும் என நம்பலாம். 


Post your comment





Related News
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions