விஜய் நடிப்பும், நடனமும் எனக்கு மிகவும் பிடிக்கும்: எமிஜாக்சன்

Bookmark and Share

விஜய் நடிப்பும், நடனமும் எனக்கு மிகவும் பிடிக்கும்: எமிஜாக்சன்

விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தில் 2–வது நாயகியாக எமிஜாக்சன் நடித்திருக்கிறார். இது பற்றி அவரிடம் கேட்ட போது....

‘தெறி’ படத்தில் நான் ஒரு ஆசிரியையாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் எனக்கு கிடைத்திருக்கும் வேடம் பேசப்படும். எனக்கு பிடித்த நல்ல வேடத்தை இயக்குனர் அட்லி கொடுத்திருக்கிறார்.

விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அவருடைய நடனம், நடிப்பு இரண்டும் எனக்கு பிடிக்கும். அவருடன் நடிப்பதற்காகவே 2–வது நாயகி வேடத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.

இந்த படத்தில் நான் நடித்திருக்கும் வேடம், படம் ரிலீஸ் ஆன பிறகு அனைவருடைய மனதிலும் பதியும். தெறி படம் ரசிகர்கள் மனதை கவரும் படமாக இருக்கும்’ என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions