அஞ்சல ஆடியோவை வெளியிட்ட விஜய்!

Bookmark and Share

அஞ்சல ஆடியோவை வெளியிட்ட விஜய்!

பிரபல சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘அஞ்சல’. இப்படத்தில் விமல், நந்திதா, பசுபதி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை தங்கம் சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த வாரம் திரைக்கு வெளிவர தயாராக உள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ சிடியை நடிகர் விஜய் வெளியிட்டு உள்ளார். இது படக்குழுவினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து, இப்படத்தின் தயாரிப்பாளர் திலீப் சுப்பராயன் கூறும்போது, 

விஜய்-59 படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கும்போது, அவரிடம் ‘அஞ்சல’ படத்தின் ஆடியோ சிடியை வெளியிட முடியுமா? என்று கேட்பதற்கு சற்று தயக்கமாக இருந்தது. 

இருப்பினும், ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அவரிடம் இந்த கோரிக்கையை வைத்தேன். சற்றும் தயங்காமல் உடனே வாங்க என்று சொல்லி ‘அஞ்சல’ ஆடியோ சிடியை வெளியிட்டார். 

இந்த படத்தின் மூலம் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள் ஏராளம். அதில் முக்கியமானதாக விஜய் என்னிடம் அன்று கூறிய ஊக்க வார்த்தைகள்தான். இந்த வார்த்தைகள் திரை உலகில் நான் தயாரிப்பாளராக நீடிக்கவும், வெற்றி வெறபும் மிக முக்கிய வார்த்தைகளாக இருக்கும் என்று கூறினார். 

திலீப் சுப்பராயன் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தில் சண்டை பயிற்சியாளர்களாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions