மனைவி முன்புகூட நடிகைகளை கட்டிப்பிடிப்பாராம் விஜய் ஆண்டனி!

Bookmark and Share

மனைவி முன்புகூட நடிகைகளை கட்டிப்பிடிப்பாராம் விஜய் ஆண்டனி!

சினிமாவில் புதிதாக நடிக்க வருபவர்கள், நடிகைகளுடன் இணைந்து நடிக்கிற காட்சிகளில் நடிக்கும்போது மட்டும் நடுங்கிப்போவார்கள்.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நெருங்கினாலும், நடிகையின் கை இவர்கள் மீது பட்டதும் ஏற்படும் படபடப்பினால் சாதாரணமாக கட்டிப்பிடித்து நடிக்கும் காட்சிகளுக்குகூட பல டேக் வாங்குவார்கள்.

அப்படித்தான் நான், சலீம் படங்களில் நடித்தபோது விஜய் ஆண்டனியும் இருந்தார். அதனால்தான் அவர் நடித்த படங்களில் ரொமான்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தனர். ஆனால், இந்தியா பாகிஸ்தான் படத்தில் கன்னட நடிகை சுஷ்மா ராஜூடன் புகுந்து விளையாடியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

இந்த படத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் வேடம் என்பதால், காதல் மனைவியுடன் அதிக நெருக்கம் காட்டி நடித்துள்ளாராம். அந்த வகையில், முந்தைய இரண்டு படங்களையும் விட இந்த படத்தில் அவரது நடிப்பில் நிறைய முதிர்ச்சியும் தெரிகிறதாம்.

மேலும், அடுத்தடுத்து படங்களில் மற்ற இளவட்ட ஹீரோக்களைப் போன்று தானும் முத்தக்காட்சிகளிலும் இறங்கி நடிக்கப்போவதாக சொல்லும் விஜய் ஆண்டனி, நடிகைகளுடன் நெருங்கி நடிக்க எனக்குள் தயக்கம் இருந்தது உண்மைதான்.

ஆனால் இப்போது தேறி விட்டேன். அந்தந்த கதாபாத்திரத்திற்கு தேவையான அளவு நெருங்கி நடிக்க என்னை தயார்படுத்தி விட்டேன். குறிப்பாக, என் மனைவி எதிரே நடிகையை கட்டிப்பிடித்து நடிக்கச்சொன்னாலும் தயங்காமல் நடிப்பேன். அந்த அளவுக்கு நான் முழு நடிகனாகியிருக்கிறேன் என்கிறார்.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions