விஜய் ஆண்டனியின் அடுத்த அவதாரம்

Bookmark and Share

விஜய் ஆண்டனியின் அடுத்த அவதாரம்

சுக்ரன் படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ, விஜய் ஆண்டனிக்கு தொடர்ந்து சுக்கிர திசை அடித்துக்கொண்டிருக்கிறது... தமிழ் மட்டுமல்லாது கன்னடம் மற்றும் தெலுங்கு  திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வந்த விஜய் ஆண்டனி, நான் படத்தின் மூலம் நடிகர் ஆனார்.

அப்படத்தின் வெற்றி, அவரை இசையமைப்பு மட்டுமல்லாது, நடிப்பு ஆசையும் அதிகரித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து சலீம் படத்தில் நடித்தார்.

சலீம் படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற்றது. இவ்விரு படங்களிலும், முகபாவனைகளால் மட்டுமே நடித்து வந்த விஜய் ஆண்டனி, தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் படத்தில் காமெடி, ரொமான்ஸ் உள்ளிட்ட துறைகளிலும் பின்னி எடுத்துள்ளார் என்றே கூற வேண்டும்.வெளியான மூன்று படங்களும், வெற்றிப்படங்களாக அமைந்திருந்த நிலையில், விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இசையமைப்பாளர், நடிகர் என்ற இரு துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ள விஜய் ஆண்டனி, அடுத்ததாக, இயக்குநர் அவதாரம் எடுக்கப்போகிறாராம்... சலீம் படத்தின் வெற்றி்யை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை, விஜய் ஆண்டனியே இயக்கப்போக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் ஆண்டனியின் இசையமைப்பில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற "நாக்க முக்க" பாடல், சிறந்த கமர்ஷியல் பாடலுக்கான கேன்ஸ் கோல்டன் லயன் விருது பெற்றுள்ளது.

இந்த விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை விஜய் ஆண்டனி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாக்க முக்க பாடல், 2011ம் ஆண்டில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் தொடரின் துவக்கவிழாவில், இசைக்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions