சைத்தானை தொடங்குகிறார் விஜய் ஆண்டனி!

Bookmark and Share

சைத்தானை தொடங்குகிறார் விஜய் ஆண்டனி!

நான், சலீம் படங்களுக்கான கதையை கேட்டபோதே, சைத்தான், திருடன் என்ற படங்களின் கதைகளையும் கேட்டுவிட்டார் விஜய் ஆண்டனி. ஒவ்வொரு படமாக இந்த படங்களை நானே தயாரித்து நடிப்பேன் என்று சொல்லி நான், சலீம் படங்களை முடித்து விட்டு அவர் சைத்தான் படவேலைகளில் இறங்கயிருந்தபோது, டைரக்டர் சசி சொன்ன பிச்சைக்காரன் கதை பிடித்து விட அந்த பட வேலைகளில் இறங்கினார்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டிருந்தபோது ஜீவாவைக்கொண்டு தான் இயக்கிய டிஷ்யூம் படத்தில் அவருக்கு சான்ஸ் கொடுத்தவர் டைரக்டர் சசி.

அந்த படத்தில் இடம்பெற்ற நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் என்ற பாடல் அப்போது விஜய் ஆண்டனிக்கு பெயர் வாங்கிக்கொடுத்தது. அதனால்தான், அவர் வந்து தன்னிடம் கதை சொன்னதும் அதை விஜய் ஆண்டனியினால் நிராகரிக்க முடியவில்லை.

ஆக, பிச்சைக்காரனில் நடிக்க ஆரம்பித்த விஜய் ஆண்டனி இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இந்த நிலையில், தனது அடுத்த படமான சைத்தான் வேலைகளிலும் தற்போது ஈடுபட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

அதற்கான  நடிகர்- நடிகைகள், டெக்னீசியன்கள் தேர்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், மார்ச் இறுதியில் சைத்தான் படப்பிடிப்பை தொடங்கி ஜூன் மாதம் வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions