ஹிட்லர் படத்தையும் தொடங்குகிறார் விஜய் ஆண்டனி!

Bookmark and Share

ஹிட்லர் படத்தையும் தொடங்குகிறார் விஜய் ஆண்டனி!

நான், சலீம் படங்களில் நடித்துள்ள இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இந்தியா பாகிஸ்தான் படத்தை ஏற்கனவே முடித்து விட்டார். டிசம்பர் மாதமே வெளியாக வேண்டிய அப்படம் தியேட்டர் பிரச்னை காரணமாக இன்னும் வெளிவராமல் உள்ளது.

இருப்பினும் ஏப்ரலில் கண்டிப்பாக வெளிவருகிறதாம். அதையடுத்து, சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக பாண்டிச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே சைத்தான் படத்திலும் சில நாட்கள் நடித்துள்ளாராம் விஜய் ஆண்டனி. தற்போது பிச்சைக்காரன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், ஏப்ரல் மாதத்தில் இருந்து சைத்தான் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற உள்ளதாம்.

மேலும், அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ஹிட்லர் என்ற படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. அதன்பிறகு திருடன் படம் தொடங்கப்படுமாம்.

ஆக இந்த ஒரே வருடத்தில் இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், ஹிட்லர், திருடன் என ஐந்து படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions