பிச்சைக்காரன் பாடல் குறித்து விஜய் ஆண்டனி விளக்கம்

Bookmark and Share

பிச்சைக்காரன் பாடல் குறித்து விஜய் ஆண்டனி விளக்கம்

விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பிச்சைக்காரன்’. சமீபத்தில் இப்படத்தின் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடல் டாக்டர்களை அவமதித்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு’ என்ற சமூக விழிப்புணர்வு பாடலை, ‘பிச்சைக்காரன்’ படத்தின் விளம்பர பாடலாக கவிஞர் லோகன் எழுதியுள்ளார்.

அந்த பாடலில், பண பலம் படைத்த கல்வித்தகுதி இல்லாத சிலர், தன் பண பலத்தை உபயோகித்து தனியார் கல்வி நிறுவனங்கள் சிலவற்றுக்கு லட்சங்களையும் கோடிகளையும் கொடுத்து, மருத்துவர்களாகி, நல்ல மருத்துவ சமுதாயத்துக்கு களங்கம் விளைவிக்கின்றார்கள் என்பதைத்தான், ‘கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்’ என்று பாடலாசிரியர் லோகன் குறிப்பிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த டாக்டர்களை அவமதித்து, லோகன் இந்த பாடலை எழுதவில்லை. இன்னும் சொல்லப் போனால், லோகனும் பாடலை பாடிய வேல்முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து, சாதனை படைத்தவர்கள்தான்.

ஒரு வரியை வைத்து எங்கள் மீது களங்கம் கற்பிக்க வேண்டாம், இந்த பாடலை முழுமையாக கேட்டால்தான், இந்த பாடல் எழுதப்பட்ட நோக்கம் என்ன, அது யாருக்காக எழுதப்பட்டது, என்பது உங்களுக்கு புரியும்.

இந்த பாடல் மூலம், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைத்தான் எடுத்து சொல்கிறோமே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.

ஒரு நல்ல மருத்துவன் எப்படி வாழ வேண்டும் என்று, என்னுடைய முந்தைய படமான ‘சலீம்’-ல் வாழ்ந்து காட்டியவன் நான். சமூகத்தின் மேல், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூதாயத்தின் மேல், மிகுந்த அக்கறை எனக்கு உண்டு.

பாடலின் அர்த்தம் சிலருக்கு சரியாக புரியவில்லை என்பதால், ‘கோட்டா’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, ‘காசு கொடுத்து’ என மாற்றி விட்டோம் என்பதை, தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாடலாசிரியர் லோகன் எழுதிய பாடல் வரிகள் சிலரை புண்படுத்தி இருந்தால், அதற்கு என் ‘பிச்சைக்காரன்’ படக்குழுவின் சார்பாக நான் தகுந்த விளக்கமளித்துள்ளேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions