ஒரே நாளில் தன் இரண்டு படங்களின் ஆடியோ விழா நடத்தும் விஜய் ஆண்டனி!

Bookmark and Share

ஒரே நாளில் தன் இரண்டு படங்களின் ஆடியோ விழா நடத்தும் விஜய் ஆண்டனி!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களைத் தொடர்ந்து சசி இயக்கத்தில், பிச்சைக்காரன் படத்தில் நடித்துள்ளார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, சைத்தான் படத்திலும் நடிக்கத் தொடங்கிய விஜய் ஆண்டனி, அப்படத்தில் 75 சதவிகிதம் நடித்து முடித்துவிட்டார்.

தற்போது பிச்சைக்காரன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடப்பதால், சைத்தான் படத்தில் இன்னும் ஒரே மாதத்தில் நடித்து முடித்து விடுவாராம். எனவே அடுத்த மாதம் இறுதியில் பிச்சைக்காரன், சைத்தான் என்ற இரண்டு படங்களின் ஆடியோ விழாவையும் ஒரே நாளில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

இந்த இரண்டு படங்களிலுக்கும் அவரே இசையமைத்திருக்கிறார். அதோடு, நாக்கு முக்க பாணியில் இந்த படங்களில் ஒரு குத்துப்பாடலையும் கம்போஸ் செய்திருக்கிறாராம் விஜய் ஆண்டனி.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions