விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்த லைக்கா புரொடக்ஷன்ஸ்

Bookmark and Share

விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்த லைக்கா புரொடக்ஷன்ஸ்

விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனமாக காலடி எடுத்து வைத்த ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தற்போது தமிழில் நிறைய படங்களை தயாரித்து வருகிறது. 

அந்த வரிசையில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘2.0’ படத்தை தயாரித்து வருகிறது. மேலும், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது. இதுமட்டுமில்லாமல், தனுஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘விசாரணை’ படத்தையும் வெளியிடவுள்ளது. 

இந்நிலையில், விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை விஜய் ஆண்டனியை அறிமுகம் செய்த ‘ஜீவா சங்கர்’ இயக்கவிருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘எமன்’ அல்லது ‘சைத்தான்’ என பெயர் வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘பிச்சைக்காரன்’ படம் விரைவில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions