டிராக்கை மாற்றுகிறார் விஜய் ஆண்டனி!

Bookmark and Share

டிராக்கை மாற்றுகிறார் விஜய் ஆண்டனி!

நான் படத்தின் நாயகனாக அறிமுகமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அதையடுத்து நான் படத்தின் இரண்டாம் பாகமான சலீம் படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே மீடியமான வெற்றியை அடைந்தன.

அதோடு, இந்த இரண்டு படங்களிலுமே கலகலப்பாக இல்லாமல் சீரியசான வேடங்களிலேயே அவர் நடித்திருந்தார். ஆனால், தொடர்ந்து அந்த மாதிரியான கதைகளிலேயே நடித்தால் விஜய் ஆண்டனி சீரியஸ் நடிகர் என்றொரு இமேஜ் உருவாகி விடும் என்பதற்காக, தற்போது நடித்துள்ள இந்தியா பாகிஸ்தான் படத்தில் சீரியசாக இல்லாமல், கலகலப்பான அதேசமயம் அதிகமாக பேசக்கூடிய கேரக்டரில் அவர் நடித்திருக்கிறார்.

கதைப்படி அப்படத்தில் விஜய் ஆண்டனியும் அவரது மனைவியாக நடித்திருக்கும் சுஷ்மா ராஜ் இருவருமே வழக்கறிஞர்களாம். இவர்களுக்கிடையே ஏற்படும் தொழில்முறை போட்டி காரணமாக விஜய் ஆண்டனியின் வழக்குகளை சுஷ்மாராஜ் பறித்து விடுவாராம்.

இப்படி அவர்களுக்கிடையே ஏற்படும் மோதல் ஒரு கட்டத்தில் காதலாகி கல்யாணம் செய்து கொள்வார்களாம். ஆனால், அதையடுத்து அவர்களுக்கிடையே ஏற்படும் கருத்து மோதல் காரணமாக பிரிந்து விடுவார்களாம்.

இப்படியொரு குடும்ப பின்னணியில்தான் இந்தியா பாகிஸ்தான் படம் தயாராகியிருக்கிறது. அதனால் இந்த படத்தில் முதல் இரண்டு படங்களைவிட அதிகமாக கலகலப்பாக அதேசமயம், அதிகம் பேசக்கூடியவராக நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அதோடு, இதன்பிறகும் சீரியஸ் இல்லாத மாறுபட்ட கதைகளங்களிலேயே நடிக்கிறாராம் அவர்.

 


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions