ஹாட்ரிக் ஆசையில் விஜய் ஆண்டனி

Bookmark and Share

ஹாட்ரிக் ஆசையில் விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக அறிமுகமாகி 'நான்' படத்தின் மூலம் நாயகனாக நடிகராகவும் மாறியவர் விஜய் ஆண்டனி. அந்தப் படம் லாபகரமான வசூலைக் கொடுத்ததைத் தொடர்ந்து அடுத்து 'சலீம்' படத்திலும் நாயகனாக நடித்தார்.

இந்தப் படமும் வெற்றிகரமாக ஓடியது. தற்போது 'இந்தியா பாகிஸ்தான்' என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்.  

விஜய் ஆண்டனி தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆனந்த் இயக்குகிறார். தீனா தேவராஜன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நாயகியாக சுஷ்மா ராஜ் நடித்திருக்கிறார். “நான், சலீம்” ஆகிய படங்களைப் போலவே இந்தப் படமும் த்ரில்லர் படமாக இல்லாமல் ஒரு ரொமான்டிக் காமெடி படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.

படத்தின் டைட்டில்தான் பிரச்சனைக்குரிய டைட்டில் போன்று தோன்றினாலும் படத்தில் ஒரு பொருத்தமான கருத்து உள்ளது என்று படத் தரப்பிலிருந்து தெரிவிக்கிறார்கள். தான் நாயகனாக நடித்த 'நான், சலீம்' ஆகிய இரண்டு படங்களுக்குமே விஜய் ஆண்டனிதான் இசையமைத்திருந்தார்.

ஆனால், இந்தப் படத்தில் தீனா தேவராஜன் என்ற இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இப்படத்தை முழுவதுமாகப் பார்த்துவிட்டதாகவும், அடுத்து 'ஹாட்ரிக்' வெற்றிக்குத் தயாராக இருக்கிறேன் என்றும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions